திருச்சி மாவட்டத்தில் பொங்கல் விழா களை கட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் அதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 17 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. முதல் கட்டமாக திருச்சி மாவட்டத்திலேயே முதல் ஜல்லிக்கட்டாக வருகின்ற 16-ந்தேதி மாட்டுப்பொங்கல் தினத்தன்று திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரிலும்,
19-ந்தேதி திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு பகுதியிலும், மணப்பாறையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments