திருச்சி பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் பகுதி கடந்த 12ம் தேதி சேதமடைந்தது. இதையடுத்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து சென்னை ஐஐடியிலிருந்து நிபுணர் அழகு சுந்தரம் ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு மேற்கொண்டுள்ளார். இன்று காலை சேதம் அடைந்த பகுதியில் உள்ள சிமெண்ட் கற்களை பெயர்த்து எடுத்து பாலத்தின் உள்ளே சேதம் குறித்து ஆய்வு செய்யும் பணி துவக்கினார்.
இந்நிலையில் பாலத்தின் மேலே தூண் பகுதியில் 3 துளையிட்டு முதற்கட்ட பணி துவக்கி உள்ளனர். ஐஐடி போராசிரியர் அழகுசுந்தரம் அறிவுரைப்படி தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் துளையிட்டு பாலத்தின் உள்ளே என்ன சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments