VDart சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று VDart நிறுவனத்தின் சார்பில் தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைபள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்கள் தங்கள் தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ள தேவையான நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
VDart நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. சித்அகமது அவர்கள் வருகை தந்து மாணவர்களுக்கு தேவையான தேர்வு அட்டைகள், குறிப்பேடுகள், பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை 200 மாணவர்களுக்கு வழங்கினார். மேலும் மாணவர்களிடம் கலந்துரையாடி வினாக்கள் கேட்டும், தாம் எவ்வாறு உழைப்பால் உயர படிப்பு தான் காரணம் என்பதை எடுத்து கூறினார். பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை சகாயராணி நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உமா, உஷாராணி, மேரி செரோபியா, ஜெயந்தி ஆகியோர் செய்து இருந்தனர். முன்னதாக திருச்சி அரசு பார்வையற்றோர் மகளிர் மேல்நிலைபள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் VDart நிறுவனர் சித்அகமது அவர்கள் 100 மாணவிகளுக்கு தேவையான சோப்பு பிரஷ், பேஸ்ட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி சிறப்பித்தார். #திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
Comments