Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கண்ணீர் துளிகளால் நன்றி தெரிவிக்கிறேன் – திருச்சியில் திருமாவளவன் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு திருச்சியில் சிறுகனூரில் நேற்று (26.01.2024) நடைபெற்றது.  இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, ஆம்ஆத்மி தமிழ்நாடு தலைவர் வசீகரன்,  

திராவிட கழகத் தலைவர் வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும், ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம் உள்ளிட்ட  33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இறுதியாக இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்….. இந்த மாநாட்டை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் கண்ணீர் துளிகளால் நன்றி தெரிவிக்கிறேன். திருச்சி முழுவதும் நம்முடைய வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றனர். மாநாடு வெற்றிபெற்று விட்டது. மாபெரும் வெற்றி.இந்த மாநாடு பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவர், சனாதன சக்திகளுக்கு, எதிரான மாநாடு. இது சிறுத்தைகளின் மாநாடு.  இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்துள்ளது. இந்த மாநாட்டின் விழா நாயகன் அரசியலமைப்பு சட்டம் தான். Constutution தான். தலைவர்கள் ஏந்திய சுடர் ஜனநாயக சுடர். கூட்டணி கட்சியினருடன் கைகோர்த்து நிற்காமல் சுடர் ஏந்தி நிற்கிறோம்.  மக்களை ஏமாற்றி பிழைகின்ற மோசடி கும்பலிடம் நாடு சிக்கிக்கொண்டது. 10 ஆண்டுகளில் என்ன சாதித்தார்கள். 2 கோடிபெருக்கு வேலைவாய்ப்பு என கூறினார்கள். செய்யவில்லை. அயல் நாட்டு வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் போடுவேன் என கூறினார். வரவில்லை.

அதனிக்கும் அம்பானிக்கும் சேவை செய்வதுதான் 10 ஆண்டு மோடி செய்த சாதனை.ஏழை மக்கள் வாங்கும் கடன் தள்ளுபடி செய்யவில்லை. அம்பானி அதானி கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். அதானி ஏர்போர்ட், அதானி டெர்மல் என எல்லாமே அதானி அம்பனிக்குத்தான். இந்தியாவில் இருக்கிறவர்கள் இந்துக்கள் அல்ல… புத்தரின் வாரிசுகள். ராமர்கோவிளை கட்டி முடிப்பதற்குள் திறக்கிறார்கள். படிப்பு உள்ளிட்ட அடிப்படைகளை கொடுக்காமல் .. ஜெய் ஸ்ரீ ராம் என சொல் என சொல்கிறார்கள்.33 தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம். இதில் இந்திய பிரச்சனைகள் அனைத்தும் உள்ளது.அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைப்பது தான் விடுதலை சிறுத்தைகள் பேரியக்கம். 5 லட்சத்திற்கும் மேலான சிறுத்தைகள் இங்கு கூடி உள்ளனர்.

அனைத்து பொதுத்துறையையும் புதைக்கின்றனர். எங்க அப்பாவின் பெயரும் ராமசாமி தான் – தந்தை பெரியாரின் பெயரும் ராமசாமி தான், எங்களுக்கும் ராமர் உண்டு, அவர்தான் பெரியார். நாங்கள் ராமரை எதிர்க்கவில்லை அந்த அரசியலை தான் எதிர்க்கிறோம். RSS அல்ல BSS – புராணம் வேறு, வரலாறு வேறு. அல்லஹு அக்பர் என்றால் .. எல்லாரையும் விட இறைவன் பெரியவன் என்று அர்த்தம்.ஜெய் டெமோகிரசி என்பதுதான் சரியாக இருக்கும். ராமர் இடத்தில் கீழே விழுந்து மோடி மன்னிப்பு கேட்டார். நான் அரசியல் செய்கிறேன். கோவிலை வைத்து அரசியல் செய்கிறேன் என்னை மன்னித்து விடு என அவர் மைண்ட் வாய்ஸில் பேசியது எனக்கு கேட்டது.

நாட்டுக்கு பேராபத்து. அம்பேத்கார் கொண்டுவந்த அரசியலைப்புக்கு பேராபத்து. அம்பேத்கார் எழுதிய சட்டத்தை தூக்கி எறிய போகிறார்கள். நாம் அதனை பாதுகாக்க வேண்டும். பிஜேபியை விரட்ட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும். செய்வீர்களா…!  ஜெயலலிதா இல்லை என்பதால் ஒரு கத்துக்குட்டி ஆட்டை அனுப்பி உள்ளனர். வாலை சுருட்டி வைத்து கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கும் களம் அல்ல தமிழ்நாடு. இது சிறுத்தைகளுக்கான களம். வட இந்தியர்களை ஜெய் ஸ்ரீ ராம் கூறி ஏமாற்ற முடியும். ஒவ்வொரு விழா அமைத்து ஏமாற்ற நினைக்கிறார்கள். மோடி திருக்குறளை படிக்க தெரியாமல் படிக்கி றது கேவலமாக இருக்கிறது என பேசினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *