Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் அகில இந்திய வேலைநிறுத்தம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் மாநில சம்மேளன நிர்வாக்குழு கூட்டம் தலைவர் எம்.ஆறுமுகம் EXMLA தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய செயலாளர் டி.எம். மூர்த்தி பிப்ரவரி 16 ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறவுள்ள அகில இந்திய வேலைநிறுத்தம் சம்பந்தமாக விளக்கவுரையாற்றினார். சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம், அறிக்கை வைத்தார்.

துணை பொதுச்செயலாளர்கள் ம.நாராயணசிங், பி.பாஸ்கர், எம்.சுப்பிரமணியன், துணைத்தலைவர்கள் துரை மதிவாணன். எஸ்.பாண்டியன், எம்.அய்ப்பன், ஆர்.ராஜேந்திரன், செயலாளர்கள் எம் சண்முகம், என்.உலகநாதன்,டி.எம்.கணேசன், ஆர்.திருமுருகன், பொருளாளர் கே.நேருதுரை மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. 2023 செப்டம்பர் முதல் உருவாக வேண்டிய 15 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும்.

2. டிசம்பர் 2022 முதல் ஓய்வுகால பண பலன்கள் வழங்கிட வேண்டும்.

3. 2003- ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதியின் படி பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.

4. 100 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படி உயர்வை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும். 

5. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும்.

6. நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்பம் மற்றும் அலுவலக பணியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பிட வேண்டும்.

7. ஓட்டுனர் நடத்துனர் மட்டுமல்லாது கல்வித் தகுதியின் அடிப்படையில் Non -ITI ஹெல்பர் பணியிடங்களுக்கு இறந்து போன பணியாளர்களின் வாரிசுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்.

8. ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹7850/-, மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம் ₹ 62500/- மாற்றியமைத்திட வேண்டும்.

9. தொழிலாளர்களுக்கு சாதகமாக வரும் நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து நிர்வாகம் மேல்முறையீட்டுக்கு செல்வதை கைவிட வேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *