திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 6 – ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் S.முஹம்மது அர்ஷத் தாய்லாந்து நாட்டில் (27.01.2024) – ல் World Silambam Martial Association நடத்திய 2nd World Silambam Open Championship – 2024 போட்டியில் பங்கேற்று 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒற்றை சிலம்பத்தில் வெற்றி பெற்று முதல் பரிசைப் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவரை திருச்சிராப்பள்ளி மாநகர மேயர் M.அன்பழகன் வாழ்த்திப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். அத்துடன் கோட்டத் தலைவர்கள் துர்கா தேவி மற்றும் விஜயலெட்சுமி கண்ணன் உடனிருந்து வாழ்த்தினார்.
உடன் பள்ளித் தலைமையாசிரியர் A.R. சிராஜூதீன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் C. தாமஸ் ராக்லண்ட் & P. வில்சன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments