உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாமில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் கண்ணனூர் கிராமத்தில் இன்று (31.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அரசினர் மாணவர் விடுதியில் ( பி. வ.) ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு செய்யப்பட்டது. கண்ணனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளின் எடை, வளர்ச்சி மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், முன்பருவ கல்வி முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
கண்ணனூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினையும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments