திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரின் அதிரடி படையில் காவலராக இருப்பவர் செல்வகுமார். 2022 ஆம் ஆண்டு காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார்.திடீரென இவர் கோயம்புத்தூர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.எதற்காக இந்த கைது சம்பவம் என்று விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர் மீது 17க்கும் மேற்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவ வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சொகுசு கார் 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் மதுரையில் ஒரு பெரிய பங்களா கட்டி உள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
2022ல் காவல்துறையில் பணியில் சேர்வதற்கு முன்னதாக இவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தொடர் விசாரணையில் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.இவரை கோயம்புத்தூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments