Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நல்லது தான் செய்கிறார்கள் – என்.ஐ.ஏ விற்கு நன்றி – திருச்சியில் சீமான் பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களை அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான்….. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்கள் அவர்களது உறவினர்களிடம் செல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள். கருணை அடிப்படையில் இதை செய்யலாம் தானே, தமிழக அரசு இதை செய்ய முடியும் அதன் அதிகாரம் முழுவதும் தமிழக அரசிடமே உள்ளது. விஜய் கட்சியில் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்படாதது குறித்த கேள்விக்கு…அது தேவைப்படவில்லை அவற்றையெல்லாம் தமிழ் சமூகம் கடந்து விட்டது. திராவிடம் இல்லை என்றால் அரசியல் செய்ய முடியாது என்றெல்லாம் விஜயகாந்த் வரை அப்படித்தான் கருதினார்கள். ஆனால் அது தற்போது தேவையில்லை அது மாறிவிட்டது. அதைக் கடந்து தமிழ் தேசிய அரசியல் வளர்ந்து விட்டது.

இனி திராவிடம் என்று வந்தால் பத்து பைசா செலவானி ஆகாது. நாம் தமிழர் கட்சிக்கு விஜய் தொடங்கிய கட்சி ஒருபோதும் தடையாக இருக்காது. தம்பி விஜய் என்ன தத்துவம் முன் வைக்கிறார், அதில் என்ன இருக்கிறது என பார்த்து அவருடைய தத்துவம் ஏற்புடையது என அங்கு சென்றாலும் மகிழ்ச்சி தான்! அல்லது என்னுடைய தத்துவம் பிடித்திருந்து இங்கு வந்தாலும் சரிதான் தம்பி விஜயின் ரசிகர்கள் அதிகப்படியாக என்னுடைய கட்சியில் உள்ளனர். நான் விஜய்யின் ரசிகனாக இருப்பேன். ஆனால் வாக்கு அண்ணனுக்கு தான் செலுத்துவேன் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.அதை குழப்பிக்க வேண்டியதில்லை. தேர்தல் நேரத்தில் என்.ஐ.ஏ சோதனை என்பது சிறு விளையாட்டு தான். NIA குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். இவ்வளவு நாள் விட்டுவிட்டு அடுத்த மாதம் தேர்தல் வரும் பொழுது இப்படி செய்வது எதற்கு என்று தெரியவில்லை.

என்.ஐ.ஏ சோதனையின் மூலம் நாங்கள் பாஜகவின் B- TEAM இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதை தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்தேன். ஆனால் திமுக தான் எங்களை பாஜகவின் B TEAM என சொல்லி வந்தது. சோதனை செய்து பாஜகவின் B- டீம் நாங்கள் இல்லை என நிரூபித்தருதற்கு என்.ஐ.ஏ விற்கு நன்றி தான் சொல்வேன். என்.ஐ.ஏ வை வைத்து என்னை மிரட்டவில்லை எனக்கு  நல்லது தான் செய்கிறார்கள் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *