Monday, September 22, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கள்ள சாவி போட்டு வீட்டில் திருட முயற்சி – திருச்சி சிறுவர்கள் கைது!

திருச்சி சந்துக்கடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் வசித்து வருபவர் கணேசன். இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு சாவியை மறந்து பூட்டிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கணேசனுக்கு தெரியாமல் பூட்டில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு கள்ளசாவி செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

கணேசன் சாவியை பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது பூட்டிலிருந்ந சாவியை இரண்டு சிறுவர்கள் எடுப்பது தெரியவந்தது. பின்னர் சிறிது நேரத்தில் எடுத்துச்சென்ற சாவியை திரும்ப வைப்பதற்காக வந்த சிறுவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து, கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

Advertisement

சிறுவர்கள் நூதன முறையில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *