இந்திய பாராளுமன்றத்தின் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர் கனிமொழி பற்றி, திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த பாஜக மூத்த உறுப்பினர் ஆட்டோ சீனி என்கின்ற சீனிவாசன் (57) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டுள்ளார். அது தொடர்பாக, ஸ்ரீரங்கம் திமுக வட்டச்செயலாளர் ஹரிகரன் புகார் கொடுத்தார்,
அதன் அடிப்படையில் திமுக மகளிரணிச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறாக பதிவிட்டதாக, ஸ்ரீரங்கம் போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன், பாஜக அமைப்பு சாரா அணி மாநிலச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments