Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தென்னூர் நடுநிலைப்பள்ளியில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம்

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை சார்பில் மாணவர், மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சாலை பாதுகாப்பு குறித்து துவக்க உரையாற்றினார்.

சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பெ.அய்யாரப்பா, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்…. சாலைகளில் இருசக்கர வண்டி, மகிழுந்து, பேருந்து, சரக்குந்து, சிற்றுந்து எனப் பல வகை வாகனங்கள் ஒரு வழி, இரு வழி, மூவழி, நான்கு வழி, ஆறு வழி என பலவழிச் சாலைகளில் செல்கிறது. அதே நேரத்தில் பல விபத்துக்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. எனவே சாலை விதிகளை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்கும் போது உயிர்காப்பு ஏற்படும்.

விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிவேகமாக வாகனங்களை செலுத்துதல், குடிப்போதையில் வாகனம் ஓட்டுதல், வாகன ஓட்டுநர்கள் ஓட்டும் திறமையை இழப்பதால், செல்போன் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால், சாலை விதிகளை பின்பற்றாமல் இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. விபத்துகளால் காயமடைகின்றவர்களின் எண்ணிக்கை, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.

விபத்துக்கள் ஏற்படும்போது உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன் உடல் உறுப்புகளை இழக்கும் நிலையும், உயிர் இழப்பும் ஏற்படுகின்றது. சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் போது விபத்துக்களை பெரிதும் தவிர்க்க முடியும். நாம் ஒவ்வொருவரும் போக்குவரத்து சட்டங்களையும், ஒழுங்கு விதிகளையும் மதித்துச் செயல்பட வேண்டும். அதன் மூலம் விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் என்றார். அனைத்து மாணவர்களும் சாலை விதிகள் தொடர்பான பதாகைகள் ஏந்தி சாலை விதிகள் குறித்து அறிந்து கொண்டனர் தொடர்ந்து உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *