திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள பெரிய மிளகு பாறை பிரதான சாலையில் திமுக கொடி நடப்பட்டுள்ளது. இதற்காக பாறைகளை உடைக்கும் இயந்திரம் மூலம் சாலை துளையிட்டு திமுக கொடி கட்டப்பட்ட இரும்பு கம்பிகள் சாலையின் ஓரத்தில் நடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிர். சில சமயங்களில் இந்த மோசமான சாலையால் தடுமாறி கீழே விழும் சூழ்நிலையும் உள்ளது.

இந்த பெரிய மிளகு பாரை எதிரே உள்ள கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியும் உள்ளது. ஏற்கனவே மோசமான சாலையில் தற்பொழுது துளையிட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திமுக கொடி கட்டப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே இடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொடி கட்டுவதற்கு மும்மரமாக வேலை செய்யும் கட்சியினர் மோசமாக இருக்கும் சாலையை சீர் செய்ய முன்வராதது ஏன்?

சாலையின் ஓரத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ள இந்த கொடி கம்பிகளால் வாகனங்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனை அகற்ற போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புள்ளனர்.
13 Jun, 2025
390
10 February, 2024










Comments