Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நவகிரக சிறப்பு அரசு பேருந்து இயக்கம் – முன்பதிவு செய்து கொள்ளலாம்

(24.02.2024) முதல் கும்பகோணத்திலிருந்து நவகிரக சிறப்பு பேருந்து இயக்கம் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நமது தமிழக அரசின் மூலம் ஏற்கப்பட்டு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில்

நவகிரக சிறப்பு பேருந்து இயக்கம் தற்பொழுது வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்பட உள்ளது.

இதற்கு பயணக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 750/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மூன்று நபர் வாடகை கார் மூலம் நவகிரக கோவில்களுக்கும் சென்று வருவதற்கு தோராயமாக குறைந்தது 6,500/ ரூபாய் வாடகையாக மட்டும் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் மூன்று நபருக்கு ரூபாய் 2250/- மட்டும் இருந்தாலே நவகிரக கோவில்களுக்கு சென்று சிறந்த முறையில் தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்கின்ற செய்தி பயணிகளுக்கு சிறந்த பேருந்து பயணத்திட்டமாக அமைந்துள்ளது.

அதன்படி, நவகிரக சிறப்பு பேருந்தானது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 06:00 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவில் தரிசனம், இரண்டாவதாக திங்களூரிலிருந்து ஆலங்குடி சென்று காலை 07:15 மணிக்கு அங்கு குரு பகவான் தரிசனம் பின்பு காலை உணவு இடைவேளை பின்பு ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 09:00 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம். பின்பு 10:00 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் தரிசனம், பிறகு காலை 11:00 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம், காலை 11:30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரக தரிசனம், மதியம் 12:30 முதல் 01:30 வரை மதிய உணவு இடைவேளை மதியம் 2:30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம் மாலை 4:00 மணிக்கு கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், மாலை 4:45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் தரிசனம் மாலை 06:00 மணிக்கு புறப்பட்டு இரவு 8:00 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்து அடையும் வகையில் இயக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

(24.02.2024) முதல் வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும் நவகிரக சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் கீழ்கண்ட இணையதள முகவரியில் முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு www.Instcin (Mobile App) Android/I phone கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேற்படி இப்பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *