வெள்ளாமை இயக்கம் சார்பில் தமிழக கிறித்தவ பறையர்களுக்கு உள்இட ஒதுக்கீடு மற்றும் அரசியலில் பங்கு கேட்டு உரிமை போராட்டம் திருச்சி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வெள்ளாமை இயக்க நிறுவனத் தலைவர் ஜான் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மனித நேய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தமீமும் அன்சாரி, விடுதலை தமிழ் புலிகள் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் கே.சரீப், தேசிய அம்பேத்கர் கட்சி சாத்தை பாக்யராஜ் , வெள்ளாமை இயக்க துணைத் தலைவர் லியோ ராஜ், துணைச் செயலாளர் ஆரோக்கிய நாதன், தலைமை சட்ட ஆலோசகர் ஆரோக்கியதாஸ் அமைப்பாளர் அந்தோணி,
வழக்கறிஞர் அணி செயலாளர்ஆண்டனி பிரபாகரன், வழக்கறிஞர் அலெக்ஸாண்டர், மகளிரணி தலைவி சுசீலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments