பொதுத்துறை தனியார்துறை வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கும் நிலையில், எதிர்பாராத சூழல் காரணமாக அந்த வங்கி திவாலாகி விட்டால், டெபாசிட் தொகையை திரும்பப் பெற முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதுதொடர்பாக வரி ஆலோசகர் களிடம் விளக்கம் கேட்டோம். எதிர்பாராத வகையில் வங்கிகள் திவாலானால், டெபாசிட்களில் அதிகபட்சம் ஐந்து லட்சம் ரூபாய்வரை DICCC (Deposit Insurance and Credit Guarantee Corporation) என்ற ஆர்பிஐயின் சிறப்பு காப்பீட்டுப் பிரிவு இழப்பீடாக வழங்கும். தொகை வரம்பு 5 லட்சம் ரூபாயைத் தாண்டினால், இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது தனிநபராக 5 லட்சம் ரூபாய் வரை செய்யலாம். தம்பதியாக இருந்தால் கூட்டுக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம் கையில் பணம் இருந்தால், குழந்தைகள் பெயரில் தனித்தனியாக 5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்வது பாதுகாப்பானது.
எனவே வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது, அந்த வங்கிக்கு DICGC காப்பீடு இருக்கிறதா? என்று கேட்டுத் தெளிவுபடுத்திக் வேண்டும் என்றார்கள். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?
Comments