Monday, September 22, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா முதல்வர் பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் திருச்சி திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்றது.

மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு திருவரம்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் தலைமை வகித்தார். இந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமை பொதுக்குழு உறுப்பினரும் ஒன்றிய குழு துணை தலைவருமான நவல்பட்டு சண்முகம் பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கழகத் துனைபொதுச் செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்ரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது…….திருச்சி மாவட்டத்தில் தி.மு.க வை வளர்த்தெடுத்த முன்னாள் அமைச்சரும் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் செயலாளருமான அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளை நாம் இன்று அனுசரிக்கின்றோம் இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள அய்யா ஐ.பெரியசாமி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடனும் அன்பில் தர்மலிங்கம் அவர்களுடனும் நீண்ட நெடிய நட்பு உள்ளவர் என்றும் ஒரு மாவட்ட செயலாளர் மற்றும் ஒரு அமைச்சர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பெரியசாமி போன்ற மூத்தவர்கள் தான் எங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது எங்களுக்கு பெருமையானது என்றும் பாசிச பாஜக ஆட்சியானது 10 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்துள்ளது மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் என்னை எப்படியாவது வெற்றி பெற செய்ய வையுங்கள் பெட்ரோல் விலை டீசல் விலை சிலிண்டர் விலைகளை நான் குறைப்பேன் என்று கூறினார் 2014ல் 45 ரூபாய் மற்றும் 50 ரூபாய் விற்ற டீசல் மற்றும் பெட்ரோல் இன்று 103 ரூபாய் 95 ரூபாய் என விற்கப்படுகிறது ஒரு சிலிண்டரின் விலை ஆனது அன்று 400 ரூபாயாக இருந்தது இன்று 1200 ரூபாயாக உள்ளது கிட்டத்தட்ட 800 ரூபாய் அதிகரித்துள்ளது சிலிண்டர் விலை ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காகவே வாழும் தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு திட்டங்களை அளித்து வருகிறார் அதில் முதன்மையான திட்டமானது அனைத்து மகளிருக்கும் இலவச பேருந்து இதன் மூலம் ஒரு மகளிர் ஒரு மாதம் ரூபாய் 888 சேமிப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதே போல் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிருக்கான இலவச உரிமை தொகையை ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 பெண்கள் இதன் மூலம் பயன்பெறுவதாகவும் அது மட்டுமல்லாமல் பெண் பிள்ளைகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் அவர்கள் கல்லூரிகளுக்கு செல்வதற்கு சிரமப்பட்டு வருவதை அறிந்த முதல்வர் அவர்கள் கல்லூரி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி அறிவித்ததுடன் மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் பிள்ளை மட்டும் இருக்கிறது என்று உணர்ந்த பெற்றோர்கள் இது குறித்து முதல்வரிடம் முறையிட்ட பொழுது அவர்களுக்கும் தமிழ் புதல்வன் என்னும் திட்டத்தில் ரூபாய் ஆயிரம் வழங்கி வருவதாகவும் இதுபோல் முத்தான திட்டங்களை வழங்கி வருவதில் தமிழக முதல்வர் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக திகழ்ந்து வருவதாகவும் கூறினார் பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றும் அதனால் தான் தமிழகத்திற்கு கிட்டத்தட்ட எட்டு முறை வந்து சென்று விட்டதாகவும் நீங்கள் எட்டு முறை வந்தாலும் 40 முறை வந்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியை கூட வெற்றி பெற முடியாது எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுத்துரைத்தார் மேலும் இந்த கூட்டத்தில் நான் பேசும் பொழுது எனது சொந்த வீட்டில் பேசுவதாக உணர்வதாகவும் எனவே என்னை பெற்றெடுத்த தாய்மார்கள் அனைவரும் இந்த பாசிச ஆட்சியை அகற்றி மோடிக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென எடுத்துரைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு விழா திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியசாமி ஆற்றிய உரை……இந்த விழாவானது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கான விழா என்று அனைவரும் நாம் பார்க்கிறோம் ஆனால் இது ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடும் விழாவாக தான் இது அமைந்திட வேண்டுமென்றும் அருமை தம்பி திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தமிழக முதல்வர் அவர்களிடம் அரசியல் பயிற்சி மற்றும் திராவிட பயிற்சியை பெற்ற மாணவர் என்பதை நான் பெருமையாக இங்கு எடுத்துரைப்பேன் என்றும் பத்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு வராத மோடி ஏன் இப்பொழுது வந்து போகிறார் என்றால் அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றும் அவர் வென்று பிரதமர் ஆனவுடன் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் இன்று வரை அவர் அதற்கு ஆதாரமாக எந்த ஒரு வேலை வாய்ப்பையும் வழங்கிட வில்லை என்றும் அதற்கு உறுதுணையாக தமிழகத்தை மத்தியில் பாஜகவிடம் அடகு வைத்த அதிமுக தான் அதற்கு முதல் காரணம் என்றும் தமிழ்நாட்டில் ஒரு கடை நிலை ஊழியர்களுக்கு கூட வேலைவாய்ப்பு கிடைக்காத விரக்தி தன்மையே மத்தியிலாலும் பாசிச மோடி அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிகள் இலவச மின்சாரம் இல்லை என்றால் அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில் இலவச மின்சார கட்டணத்தையும் ரத்து செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான் என்றும் அவருக்கு நாம் இந்த நூற்றாண்டு விழாவை நடத்துவதில் பெருமை கொள்ள வேண்டும் என்றும் மோடி கூறுகிறார் தமிழ்நாட்டில் திமுகவை ஒழிப்போம் என் மோடி அவர்களை பார்த்து கேட்கிறோம் மோடி நீங்கள் வெற்றி பெற்றால் லஞ்ச பணத்தை ஒழிப்பேன் என்று கூறினீர்கள் ஆனால் இன்று அதானிக்கும் அம்பானிக்கும் முதலீடுகளை தாரை பார்க்கிறீர்களே இதுதான் ஒழிப்பதா என்று கூறினார் மேலும் ஏழை எளிய வீட்டிற்கு அடுப்பு கொடுத்தவர் கலைஞர் கூட்டுறவு கடன் ரத்து செய்தவர் கலைஞர் மக்களை நேசித்தவர் கலைஞர் அவர்தான் மக்களின் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் என்று எடுத்துரைத்தார் மகளிர் ஆகிய நீங்கள் மத்தியில் ஆளும் பாசிச ஆட்சியை அகற்றுவதற்கு தமிழக முதல்வர் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்திட வேண்டும் என்றும் அதற்கு உங்கள் மாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுடன் இணைந்து வேட்பாளரை வெற்றி பெற செய்திட வேண்டுமென எடுத்துரைத்தார்.

இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே என் சேகரன் வன்னை அரங்கநாதன் சபியுல்லா மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ் மாநில அணி நிர்வாகி மாமன்ற உறுப்பினர் செந்தில் துணை மேயர் திவ்யா திருவெறும்பூர் ஒன்றிய குழுத் தலைவர் சத்யா கோவிந்தராஜ் மாவட்ட துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் மூக்கன் லீலாவேலு. மாவட்டக் கழக பொருளாளர் குணசேகரன்பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் தர்மராஜ், ஏ எம் ஜி விஜயகுமார் சிவக்குமார் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.திருச்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *