Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தேங்காய் எண்ணெய் சோப் தயாரிப்பில் அசத்தும் திருச்சி பெண்

திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த சௌந்தர்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை நல்ல பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தான் செய்கிறது. அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உணவு முறை குறித்தும் உணவுகளில் கலக்கப்படும் கெமிக்கல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

நம்முடைய வாழ்வியலில் உணவு மற்றும் நம்முடைய சுகாதாரமும் மிக முக்கியம். அந்த வகையில் நாம் பயன்படுத்தும் சோப்புகளில் இருக்கும் கெமிக்கல் குறித்து அறிந்து கொண்ட இவர் இப்போது இயற்கையாக சோப் தயாரிக்கும் தொழில் முனைவோர் ஆகவும் வளம் வருகிறார். இந்த பயணம் குறித்து சௌந்தர்யா பகிர்ந்து கொள்கையில்….. எனக்கு இயற்கை குறித்த ஈடுபாடு மிக அதிகமாக இருந்தது இதனால் நம்மாழ்வார் பிறந்தநாள் அன்று மரம் வளர்ப்போம் என்ற பக்கத்தை தொடங்கி மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வருகிறேன் .

இதைத் தாண்டி நிலைத்தன்மை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அந்த வகையில் தான் நான் பயன்படுத்தும் சோப்பில் இருக்கும் கெமிக்கலில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து கொண்டு நாமே சோப் தயாரிக்கலாம் என்று ஆன்லைன் மூலம் பயிற்சி எடுத்தேன். கடந்த எட்டு மாத காலமாக இயற்கையாக வீட்டில் சோப் தயாரிக்கும் பணியையும் செய்து வருகிறேன். https://www.instagram.com/im_soundarya?igsh=MWowNmcwNmo5c3N6aw உலகிற்கு இயற்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாம் இந்த பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செய்ய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தேன்.

அதனாலயே என்னுடைய சோப்பிற்கு Earth Friendly என்ற பெயரை வைத்தேன். நான் தயாரிக்கும் சோப்புகளிலும் கெமிக்கல் பயன்படுத்துவது இல்லை அதனை பேக் செய்யும் முறைகளும் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருப்பதால் இயற்கைக்கு உகந்ததாகவும் பூமிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் உள்ளது. தேங்காய் எண்ணெய், ஆவாரம் பூ, குப்பைமேனி, பழச்சாறு மூலிகை இலைகள் இப்படி பலவகையான சோப்புகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். 

அதில் குறிப்பாக குப்பைமேனி சோப் பலரும் விரும்பி வாங்குவர். நான் தயாரிக்கும் சோப்புகளில் பயோ என்சைம் பயன்படுத்துவதால் அதனை பலரும் விரும்புவர். ஒரு சோப்பின் விலை 75 முதல் 100 ரூபாய் தான் இருக்கும் இது சிறந்த வருமானமானம் ஈட்டும் வாய்ப்பாக மாறியுள்ளது இயற்கை பொருட்கள் விரும்புவர்களின் எண்ணிக்கையே இதற்கான காரணம். மாதம் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்கிறார்  சௌந்தர்யா

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *