பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாபு என்ற நபரின் சரக்கு வாகனத்தில் ரூபாய் 1 லட்சத்து 92 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. ஆனால் அதற்குரிய முறையான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து திருச்சி மேற்கு தொகுதி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments