திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்தமாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை வந்து கொண்டு இருந்தது. அப்போது மேட்டுப்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து வயலில் கவிந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 15க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் அதிக காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments