Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மற்றவர்கள் வெளியூர் வேட்பாளர்கள் – நான் திருச்சியிலே வளர்ந்தவன் – நாம் தமிழர் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ராஜேஷ் பேட்டி

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ஆர்வலரான ராஜேஷ் மூன்று காளைகளுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமாரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் பேட்டியளித்த போது…. வெற்றியை தீர்மானித்து தான் களத்திற்கு வந்துள்ளோம். மக்களுடைய ஆதரவு அதிக அளவு எங்களுக்கு இருக்கிறது.

கடந்த 15 வருடங்களாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதியில் ஒருவர் இருந்தாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நாங்கள் மக்களோடு மக்களாக இருந்து வருகிறோம். உய்யகொண்டான் வாய்க்காலை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துவாக்குடி பால் பண்ணை சர்வீஸ் சாலை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதன் காரணமாக அந்த சாலையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கந்தர்வகோட்டை பகுதியில் முந்திரி தொழிலை மேம்படுத்தும் வகையில் புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சோமரசம்பேட்டை பகுதிகளில் பூக்களின் உற்பத்தி அதிகமாக இருப்பதன் காரணமாக அப்பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி மாநகர பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் மக்கள் என்னை வெற்றி பெற செய்தால் உலக அளவில் திருச்சி பாராளுமன்ற தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக கொண்டு வருவேன் என உறுதி அளித்தார். உங்களுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லையே என்ற கேள்விக்கு? நாங்கள் ஒரு மாத காலமாக பிரச்சாரம் செய்து வருகிறோம் சின்னம் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கினால் கூட அந்த சின்னத்தை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பது எங்களுக்கு தெரியும். எங்களைப் பொறுத்தவரை சீமான் தான் சின்னம் அவரை வைத்து தான் நாங்கள் பயணித்து வருகிறோம்.

மைக் சின்னம் வேண்டாம் என்று சொல்லவில்லை அதை விட சிறந்த சின்னத்தை பரிசீலனை செய்து கேட்டு உள்ளோம் நாளை அந்த சின்னம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார். திருச்சியில் நான்குமுனை போட்டி உள்ளது.அதில் வேட்பாளர்கள் அனைவருமே வெளி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கிறார்கள் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? அதை நான் உடைப்பேன். மக்கள் மத்தியில் அதுவும் பேசும் பொருளாக உள்ளது. அதை நான் நிச்சயம் மாற்றி காட்டுவேன். நான் பொறந்த வளர்ந்த ஊர் அனைத்துமே திருச்சி தான் அதனால் மக்கள் என்னை எளிதாக அணுக முடியும்.

நாலு முனைப் போட்டி என்பது வெளியில் இருந்து பார்ப்பதற்கு தான் எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தனித்து நிற்கிறோம் துணிந்து நிற்கிறோம். மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கட்சியின் உடைய கூட்டணியுடன் இருக்கிறார்கள அதனால் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியினுடைய வெற்றி உறுதி என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *