நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு இன்று (28.03.2024)ந் தேதி பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாளையம், குரும்பலூர், ஈச்சம்பட்டி, லாடபுரம் மேலப்புலியூர் ஆகிய பகுதிகளில் அனுமதி பெற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவருடன் உரிய அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 50 வாகனங்களில் திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு ஆதரவாக தேர்தல் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் (SST – 2 Team) பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதனடிப்படையில் பெரம்பலூர் காவல் நிலையம் குற்ற எண் 239/24 U/S 188 IPC, D/O 28.3.24 – 16.00 – 20.45, D/R 28.3.24 – 20.45 SOC ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments