Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பாரிவேந்தர் அளிப்பது வாக்குறுதி அல்ல வாழ்க்கைக்கு உறுதி

கல்வி, மருத்துவம் என இரண்டையும் தனது கண்களாக நினைப்பவர் டாக்டர் பாரிவேந்தர். காரணம் பல கல்வி நிறுவனங்களை தொடங்கிய வெற்றி கண்டவர். அதன் பயனாக பல மாணவர்களை வாழ்க்கையில் ஏற்றம் பெற செய்தவர். பல மருத்துவமனைகளை நிறுவி பலர் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய விஷயங்களை தனி நபராக செய்து செய்து வருபவர். கடந்த 5 ஆண்டுகளாக பெரம்பலூர் தொகுதி எம்.பியாக இருந்து மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார். 

ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கொடுக்கனும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, தனது வாழ்கையை மாற்றியவர். தான் சம்பாதித்த பணத்தை தொகுதி மக்களுக்கான வாரி வழங்கி வருகிறார். இன்னும் வழங்க இருக்கிறார். பெரம்பலூர் மக்களின் நீண்ட கால கனவு திட்டமான அரியலூர் – பெரம்பலூர் – துறையூர் – நாமக்கல் ரயில் திட்டத்திற்கு அனுமதி பெற்று செயற்கைகோள் ஆய்வை துவங்கி வைத்தவர் டாக்டர் பாரிவேந்தர். உடும்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர்,பெரிய வடகரை, சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு 1 கோடி மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி மக்களின் ஆரோக்கியம் காத்த அற்புதமான மனிதர் நமது டாக்டர் பாரிவேந்தர். சிறுகனூரில் புதிய மேம்பாலம் இருங்களூரில் புதிய மேம்பாலம் கட்டி கொடுத்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா அளவில் சிறந்த எம்.பி என்ற நற்பெயரை ஈட்டியுள்ளார். நாளைய இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வையோடு மாணவச் செல்வங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொடக்க கல்வி முதல் பலதரப்பட்ட மேற்கல்வி வரை 1200 மாணவர்களுக்கு வழங்கிய தனி நபராக இருந்து சாதனை புரிந்தவர். அழியாத கல்வி செல்வத்தை வழங்கி பல மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றி குடும்பங்களின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வருகிறார். கொரோனா கால கட்டத்தில் ஏழை மக்கள் சிகிச்சை பெற தான் நடத்தும் மருத்துவமனைகள் மூலம் உதவியவர்.

இந்த முறையும் தான் ஒரு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 1200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். குடும்பத்திலுள்ள தாய், தந்தை தான் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் வாழ்வில் உச்சம் பெற வேண்டும் என நினைப்பவர்கள். ஆனால் எம்பியாக இருக்கும் டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூர் உள்ள மக்களை அனைவரையும் தனது குடும்பமாக தான் பார்க்கிறார். அதனால் தான் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு தன்னால் முடிந்த கல்வி உதவியை வழங்கி வருகிறார். இந்த முறை தான் எம்பியாக பதவியேற்றால் 1200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வியை வழங்குவதாக பெரம்பலூர் மக்களுக்கு கல்வி தந்தையாக தனது கடமை சிறப்பாக செய்வதற்கு உறுதியளித்துள்ளார். பாரிவேந்தர் வர்றாரு படிக்க வைக்க போறாரு என பாடல் பாடி அப்பகுதியிலுள்ள மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *