பாராளுமன்ற தேர்தல் – 2024 திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் திருச்சியில்(Modern Control Room) உள்ள சோதனைசாவடி CCTV கேமராக்களை ஆய்வு செய்தார்கள்.
இன்று (05.04.2024)ந்தேதி பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் செலவின பார்வையாளர் சரம்தீப்சின்ஹா, திருச்சி மாநகரத்தில் செயல்பட்டு வரும் 01 முதல் 09 வரையிலான சோதனை சாவடிகளில் (Check Post) இயங்கி வரும் CCTV கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (Modern Control Room) நேரில் சென்று, சோதனை சாவடிகளில் CCTV கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்கள்.
ஒவ்வொரு சோதனை சாவடியிலும் காவல்துறை சார்பில் 2 ANPR கேமராக்களும், 2 CCTV கேமராக்களும் என ஆக மொத்தம் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில், அனைத்தும் நல்ல முறையில் செயல்பாட்டில் உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு சோதனைசாவடிக்கும் தலா 4 CCTV கேமரா வீதம் 1 முதல் 9 வரையிலான சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.
மேலும் திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் (Modern Control Room) CCTV கேமராக்களை கண்காணிப்பது சம்மந்தமாக கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்றவேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர்ந.காமினி, அறிவுரை வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments