தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற 7 நாட்கள் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் எட்டரை பகுதியில் உள்ள வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் எட்டரை பஞ்சாயத்து தலைவர் திவ்யா அன்பரசன் வீடு என்பதும், இவர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதும் கூறப்படுகிறது.
தற்பொழுது தேர்தல் பறக்கும் படையினரால் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நேரத்தில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments