திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய ஜனநாயக் கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மொராய்ஸ் சிட்டி அருகே அமைந்துள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் அமைச்சரின் வாகனத்தை வழி மறித்து சோதனையிட்டனர். சோதனையின் முடிவில் எவ்வித பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments