திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெரு, பகுதியில் உள்ள பாலன் தெருவில் 80 வருடங்களாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி புறம்போக்கு என்பதால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. தேர்தல் நடைபெறும் போதெல்லாம் வாக்கு கேட்டு வருபவர்கள் தங்களுக்கு பட்டா பெற்று தரும் பெற வாக்குறுதி அளிக்கச் செல்கின்றனர். ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை.
மேலும் தற்பொழுது இப்பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் கடந்த மூன்று மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிடமும், மாவட்ட ஆட்சியிடமும், மாநகராட்சி மேயர் ஆகியோரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
மேலும் அப்பதியில் செயல்படும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சாதகமாக நகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாகவும் பகுதி மக்கள் குற்றம் சாட்டினார். இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திடீரென பகுதி மக்கள் அப்பகுதியில் வீடுகளில் கருப்பு துணியை கட்டி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தங்களுக்கு உடனடியாக குடிநீர் உட்பட அடிப்படை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி பணிகளை மேற்கொள்ளும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு தெரிவித்தார்.
தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகளையும், மின்சார வாரியம் மூலமாக மின்சாரம் கொடுக்கும் பணிகளையும் தொடங்கினர். இந்த நிலையில் மேயர் சம்பவ இடத்திற்கு வந்ததை அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் பொழுது மாநகராட்சி மேயர் எப்படி வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் மூன்று மணி நேரமாக பரபரப்பு ஏற்பட்டதுஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments