திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் உள்ள கொற்றாங்குளம் தெருவை சேர்ந்தவர் மருதைமுத்து (65). இவர் வழக்கம்போல அப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் இவரது ஆடு, மாடுகளை மேய்த்தார்.
பின்னர் அங்குள்ள கீழ் ஏரியில் உள்ள தண்ணீரில் மருதமுத்து இறங்கிய போது ஏரியில் மண் அதிகளவில் அள்ளியதால் நீரில் மூழ்கி முதியவர் மாயமானார். தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர்கள் பிரபு, இளங்கோ தலைமையில் வீரர்கள் அசோக், சுரேஷ், மணிகண்டன், விஜய் அமிர்தராஜ், மனோஜ் குமார், பிரபு, சாகுல் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்க்கு சென்று நீரில் மூழ்கி மாயமான முதியவர் மருதைமுத்துவை சடலமாக மீட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments