திருச்சி மாவட்டம் திருச்சி – துறையூர் சாலையில் உள்ள மங்களாபுரம் ஒயின்ஷாப் அருகே பெண் புள்ளிமான் ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த பெண் புள்ளி மானை பார்த்தபோது அது நாய்கள் கடித்து குதறியதால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து உயிரிழந்த புள்ளி மானின் உடலை மீட்ட துறையூர் வனத்துறையினர் அதை அருகே உள்ள புலிவலம் வனப்பகுதியில் அடக்கம் செய்தனர். மங்களாபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து மான்கள் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீரைத் தேடி ஊருக்குள் வருவதால் அங்கிருந்த நாய்கள் கடித்து குதறி இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் வனப்பகுதிகளுக்குள் வன விலங்குகள் நலன் கருதி ஆங்காங்கே குட்டைகள் அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments