திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதம் இருமுறை எனப்படுகிறது. இந்த நிலையில், இன்று (25.04.2024) நிரந்தர உண்டியல்களில் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், 67லட்சத்து 80ஆயிரத்து 962 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 897 கிராம் தங்கம், 2 கிலோ 527 கிராம் வெள்ளி, 59 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள், 959 அயல்நாட்டு நாணயங்கள் இருந்தன.
உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம்
1. அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன்.
2. சி.கல்யாணி, இணை ஆணையர் / செயல் அலுவலர்.
3. பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்.
4. இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்.
5. சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர்.
6. தி.அனிதா, உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு, தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
7. ம.லெட்சுமணன், உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி
8. திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில்
9. நா. சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்
10. திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில்.
11. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.
இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள். (17.04.2024)
Comments