திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர் பால் பேட்டரிக் (42). இவர் காட்டூர் புகழ் நகர் பகுதியில் உள்ள குளோபல் வெல்டிங் டெக்னாலஜி என்ற கம்பெனியில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் காலை வழக்கம்போல் பால் பேட்டரிக் பணிக்கு சென்றுள்ளார்.
அங்கு கம்பெனியில் லேத் மெஷினை சக தொழிலாளர்களுடன் சேர்ந்து நகர்த்திய பொழுது லேத் மெஷின் பால் பேட்டரிக் மீது விழுந்துள்ளது. இதில் பலத்த அடிபட்ட பால் பேட்டரிக் மீட்டு சக ஊழியர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பதிசோதித்த மருத்துவர்கள் பால் பேட்டரிக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அவரது அண்ணன் வில்லியம் கிரேன் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். பால் பேட்டரிக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து உள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்தினர் பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்து வந்த நிலையில் கம்பெனியில் விபத்தில் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments