திருச்சி இனாம்குளத்தூர் அரசு பள்ளி ஆசிரியை ரோஸ்லின் மேரி (37), திருச்சி சுந்தர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் 10 வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்திவிட்டு, மன்னார்புரம் மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அவர் கழுத்தில் இருந்த 1 1/2 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு சென்றனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் நேற்றுடன் முடிவடைந்தது. திருச்சி காஜாமலை பகுதியில் பெரியார் மணியம்மை பள்ளி முகாம் அலுவலகமாக செயல்படுகிறது. ஒரே வாரத்தில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை முடித்துள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி ஈடுபட்டதற்கான ஊதியம் கொடுக்காமல் மதியம் முதல் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரியார் மணியம்மை முகாம் அலுவலகத்தில் கொசுக்கடியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments