திருச்சி மாவட்ட சுகாதார அலுவலர் சுப்பிரமணி உத்தரவின் பேரில் துறையூர் வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகர் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிச்சாமி மற்றும் வட்டார சுகாதார நகராட்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் துறையூர் பேருந்து நிலையம், பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
இதில் 16 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கடை களுக்கு ரூ.8,900 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments