திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உதவி கால்நடை மருத்துவர் லட்சுமி பிரசாத் தலைமையில் நடைப்பெற்ற கால்நடை மருத்துவ முகாமில் கிராம வேளாண் அனுபவ பயிற்சியில் எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் அபர்ணா, அபிநயா, அபிராமி, அப்ரின்பானு அக்ஷயா, அனு, அனுஸ்ரீ ஆரோக்கிய ப்ரனிதா கலந்து கொண்டனர்.
இம்முகாமில் பிளேக்கிற்கான தடுப்பூசியிடப்பட்டது (Peste des Petits ruminants – PPR). மேலும் தடுப்பூசி குறித்து விளக்கமளிக்கப்பட்டது மற்றும் கன்றுகளுக்கு காது அடையாள வில்லை (tagging) போடப்பட்டது. அந்த கிராமத்தில் உள்ள விவசாய பொதுமக்களின் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments