அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ஏழைகளுக்கு உணவு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த வகையில் திருச்சி மன்னார்புரம் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளருமான ரத்தினவேல் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பகுதி செயலாளர்கள் பூபதி, சுரேஷ்குப்தா, ஏர்போர்ட் விஜி, அதிமுக திருச்சி மாநகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments