திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பாகளவாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதி. அவரது மனைவி லதா காய்கறி வியாபரம் செய்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அதிகாலை 02:30 மணி அளவில் மர்மநபர் ஒருவர் வீடு புகுந்து லதாவின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளார். அப்பொழுது லதா சுதாரித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார்
இதையடுத்து திருடன் தப்பி ஓடிய நிலையில் கிராம மக்கள் உதவியுடன் அருகில் இருக்கும் காட்டுக்குள் தேடியபொழுது திருடன் முற்புதரில் இருப்பது தெரியவந்தது. அவனைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடிகொடுத்து நையபுடைத்தனர். அப்போது போதையில் தெரியாமல் செய்து விட்டதாகவும், தன்னை மன்னித்து விடும்படியும் திருடன் கூறியுள்ளான். அவனிடம் பெயர் மற்றும் ஊர் குறித்து கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளான்.
இதை அடுத்து புலிவலம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற புலிவலம் காவல்துறையினர் மரத்தில் கட்டி வைத்துத்திருந்த திருடனை மீட்டனர். பிடிபட்ட திருடனிடம் புலிவலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments