Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி ரயில் நிலையத்தில் இளம் பெண்கள் கவர்ச்சி நடனம் – வைரல்

பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் புகைப்படம் எடுப்பது சகஜமாகி விட்டது. தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு நிகழ்வையும் ஒளிப்பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வழக்கமாக உள்ளது. ரீல்ஸ் என்ற பெயரில் அநாகரிகமாகவும், பிறரை எரிச்சலூட்டும் விதமாகவும் நடித்து அவற்றை ஒளிப்பதிவு செய்கின்றனர்.

ரீல்ஸ் என்கின்ற பெயரில் இளம் வயது ஆண் – பெண் முதல் வயதானவர்கள் பதிவிடும் அநாகரிகமான வீடியோ சமூக சீர்கேட்டுக்கு எடுத்து செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் 3 இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது மட்டுமின்றி தெருக்களிலும் இந்த கவர்ச்சி ஆடையில் நடனமாடி பதிவேற்றம் செய்துள்ளனர்.

குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நடனம் மற்றும் நாடகம் போன்றவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி பெற்று நடத்தப்படுவது வழக்கம். ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள இந்த ரயில் நிலையத்தில் யார் அனுமதி பெற்று மூன்று இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடனம் ஆடினார்கள்?

சாதாரணமாக நாட்டின் நான்காம் தூணாக சொல்லக்கூடிய ஊடகத்துறையினர் ரயில் நிலையங்களில் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்ய முறையாக ரயில்வே காவல்துறை அனுமதி பெற்று அதன் பிறகு தான் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் சாதாரணமாக இந்த பெண்கள் பொதுமக்கள் மத்தியில் கவர்ச்சி ஆடையில் நடனம் ஆடி பதிவேற்றம் செய்துள்ளதை சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் தனிநபர் சுயலாபத்திற்காக இதுபோன்ற அநாகரிகமான முறையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. உடனடியாக சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *