திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து பத்தாம் வகுப்பு தவறிய மாணவர்களுக்கு இலவச துணைத்தேர்வுக்கான வகுப்புகள் நடத்தவுள்ளது. வரும் மே.18 அன்று முதல் மாவட்ட மைய நூலகத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது.
இப்பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிமைகளில் காலை 10:00 முதல் மதியம் 01:00 மணி வரை நடை பெறும். மற்ற நாட்களில் வாட்ஸ்-அப் குழுவில் தினந்தோறும் வினா விடை கள் காணொளி காட்சி வாயிலாக பயிற்சி மேற் கொள்பவர்களுக்கு பகிரப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள மாணாக்கர்கள் தங்கள் பெற்றோர்களுடன், பாட புத்தகங்கள், நோட் மற்றும் பேனா கொண்டு வர வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாதவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்புகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் சிவகுமார் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வர்கள் மாவட்ட மைய நூலகத்திற்கு நேரில் வந்துதங்களது ஆதார் நகல், பத் தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் தங் கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு ஒருங்கிணைப் பாளரின் 6383690730 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
மாணவர்களுக்கு இப்பயிற்சி வகுப்பு எடுக்க ஆர்வம் உள்ள தன்னார்வ லர்கள் 9344754036 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட மையநூலக முதல்நிலை நூலகர் தன லெட்சுமி தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments