திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோ விலில் பிச்சாண்டேஸ்வரருக்கு வைகாசி தேர் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பிச்சாண்டேஸ்வரர் தினமும் மாலை சூரிய பிரபை, பூத வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் சவுந்தர பார்வதி உடனுறை பிச்சாண்டேஸ்வரர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம் நடைபெற்றது. மாலை மாற்றுதல், மாங்கல்ய பூஜையை தொடர்ந்து சவுந்தர பார்வதி, பிச்சாண்டேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை ( 21.05.2024 செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments