திருச்சி மாநகரில் 3 மணி நேரத்திற்க்கும் மேலாக நீடிக்கும் தொடர் மழையால் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வேலை முடிந்து வீட்டிற்கு திரும்புவார்கள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
முக்கியமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் குறுகிய சாலைகளில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்றுச்சாலையில் செல்ல நீண்ட நேரம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது.
இதே போல் காந்திசந்தை அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்து வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments