திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பின்னவாசல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (34). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வீட்டிற்க்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3.2 பவுன் நகை திருட்டுப் போனது தெரியவந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகையை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து லால்குடி காவல்நிலையத்தில் நாகராஜ் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments