தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோரி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி பீமநகர் கிளையின் சார்பாக மாபெரும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் பிரச்சாரம் கிளை தலைவர் கே.ஆர்.எம். ஆஜிப் தலைமையில் நடைபெற்றது.
இப்பிரச்சாரத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி கலந்துக் கொண்டு நோட்டீஸ் வழங்கும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக், மாவட்ட செயலாளர் தளபதி அப்பாஸ்,மாவட்ட பொருளாளர் நியாமத்துல்லா, மாவட்ட செய்தி தொடர்பாளர் Dr.S.பக்ருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்னகர் ரபீக், K.முபாரக் அலி,
மேற்கு தொகுதி தலைவர் சிராஜ், தொகுதி செயலாளர்கள் சையது முஸ்தபா, K.முஹம்மது சலீம், வர்த்தக அணி மாவட்ட தலைவர் சபியுல்லா, அப்பாஸ் மற்றும் பீமநகர் கிளை நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டு நோட்டிஸ் பிரச்சாரத்தை பீமநகர் பகுதி முழுவதும் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments