திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஒரத்தூர் கண்ணனூர் சந்திப்பு சாலையில் மிகப் பெரிய பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மழைநீர் தேங்கி நீர் வடியாமல் குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளரிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதற்க்காக இந்த சாலையை கடந்து தான் பொதுமக்கள் செல்ல வேண்டும்.
தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை சீரமைத்து பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments