பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன் தலைமையில் திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாஜகவினர் கொண்டாட்டம்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
1962ம் ஆண்டு முதல் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு எந்த ஒரு பாரத பிரதமரும் நிகழ்த்தாத சாதனையான தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று பாரத பிரதமராக பொறுப்பேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 04ம் தேதியன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு
பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன் தலைமையில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டு, குழந்தைகளுக்கு சத்தான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments