திருச்சி திருவானைக்காவல் நெல்சன் சாலை பகுதியை சேர்ந்தவர் சேசாயி அம்மாள் (95). கீற்று கொட்டகையில் தனியாக வசித்து வந்த இவர், அருகில் இருந்த 2 வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வந்த வருமானத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் சேசாயி அம்மாள் வெளியே வரவில்லை.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், மர்மமான முறையில் சேசாயி அம்மாள் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததும், அவர் அணிந்திருந்த 5 பவுன் நகை கொள்ளை போனதும் தெரியவந்தது. தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தடவியல் நிபுணர்கள் வீடுகளில் இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், மூதாட்டியின் உடலில் காயங்கள் இல்லாததும், துணியால் கழுத்தை இறுக்கி கொன்று நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments