திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரம்மாள் (55). இவரது மகன் மணிகண்டன் (27) இவர் பொறியியல் பட்டதாரி இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி மாலை மணிகண்டன் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது வலியில் பைக்கை நிறுத்தி அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் தமிழ்ச்செல்வன், துவாக்குடி பாரதிதாசன் தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் சப்பை (எ) பகத்சிங், மேட்டு தெரு அம்பேத்கார் நகரை சேர்ந்த சஞ்சய், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சுமன் ஆகிய 4 பேரும் அரிவாளால் மணிகண்டனின் கால், கை, மூக்கு ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து வீரம்மாள் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடிப் போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்யாமல் உள்ளனர் இதனால் அவர்கள் நான்கு பேரும் இன்ஸ்டாகிராமில் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து போஸ்டர் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென காவல்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பற்றி துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments