திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் காவல்துறை எல்லையிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் தினந்தோறும் இரவு நேரத்தில் மணல் மாபியா கும்பல் மணல் கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் கொள்ளிடம் போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளித்தள்ளனர்.
இந்நிலையில் அந்த புகாருக்கு கொள்ளிடம் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மணல் கடத்தலில் ஈடுபடும் மணல் மாபியா கும்பலுக்கு ஆதரித்து பணம் பெற்று கொண்டு கண்டும் காணமல் இருந்துள்ளனர். மேலும் கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தல் கும்பலுக்கு கொள்ளிடம் போலீசார் ஆதரித்து வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனி பிரிவுக்கு தகவல் கிடைக்க பெற்றது.
இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட கொள்ளிடம் காவல்நிலையத்தை சேர்ந்த 21 போலீசார்களை திருச்சி ஆயுதப்படையிக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments