தமிழ்நாடு அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதை கண்டித்து திருச்சி காந்தி சந்தை அருகே பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பாடைக்கட்டி எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடையை தூக்கி வந்த பொழுது காவல்துறையினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் அவர்கள் பாடையை தூக்க காவல்துறையினர் ஒரு பக்கம் தூக்கி இழுக்க என பெரும் ரகளையே நடைபெற்றது. இறுதியாக காவல்துறையினர் பாடையில் உள்ள குச்சிகள் ,தென்னை ஓலைகளை தனித்தனியாக பிரித்து எடுத்தனர். அதையும் தாண்டி பாரதிய ஜனதா கட்சியினர் ஊர்வலமாக தமிழக அரசு எதிராக கோஷங்களை எழுப்பி சென்றனர் . அவர்களிடம் இருந்து பறை உள்ளிட்ட பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சாலையின் நடுவே ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தினால் காந்தி சந்தை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments