திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியில் மண்ணச்சநல்லூர் சிறப்பு காவல் உதவியாளர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நொச்சியம் கடைவீதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நொச்சியம் மேலத் தெருவை சேர்ந்த ராஜா (52) என தெரிய வந்தது.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ 7,480 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments