பிரசித்தி பெற்ற திருச்சி வயலூர் முருகன் கோவிலில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. ராஜகோபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கோபுரங்களில் புதிய வேலைபாடுகளுடன் வர்ணம் பூசப்பட்டு குடமுழுக்கிற்க்கு பணிகள் நடைபெற்று வருகிறது. கோயில் உட்புறம் உள்ள மண்டபம் உள்ளிட்ட சன்னதிகளும் புதுப்பிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று நவக்கிரகங்கள் அம்பாள், மகாலட்சுமி உள்ளிட்ட 11 நவக்கிரகங்கள் மற்றும் உப சன்னதிகளுக்கு பாலாலயம் நடைபெற்றது. ஏற்கனவே திட்டமிட்டபடி செப்டம்பர் 1ம் தேதி குடமுழுக்கு நடத்த முடியாத நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்னும் மூன்று மாத காலத்தில் மூலவர், சுவாமி, அம்பாள், சிவன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு திருக்குடமுழுக்கு நடைபெறும் என பட்டாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர். திருப்பணிகள் அனைத்தும் உபயதாரர்கள் உதவியுடன் பல கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments